18813344_327289544369523_1214730621086064537_n

இந்துத்துவத்தின் அடிப்படைகள்

160.00

இந்துத்துவம் என்பதற்கும் இந்து மதம் என்பதற்கும் மேலெழுந்த வாரியாக உள்ள ஒற்றுமையே நம் இந்து சகோதரர்களிடையே இருக்கும் பெருந்தன்மை படைத்தவர்களையும் அவைகளில் இருந்து தள்ளி நிற்கத் தூண்டும் அச்சத்தைக் கொள்ள வைக்கிறது. அவை இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை இப்போது தெளிவாகக் காணலாம். அந்நியக் கலப்பு உள்ள ஒரு சொல் என்று எதையேனும் சொல்ல வேண்டுமானால் இந்த “இந்தீயம்” அல்லது “இந்து மதம்” என்று அறியப்படுகின்ற சொல்லை எடுத்துக்காட்டலாம். அவ்வாறு இறக்கை முளைத்து வந்துள்ள ஒரு பெயர் நம்மைக் குழப்பத்தில் கொண்டுபோய்விட நாம் அனுமதிக்கலாகாது. வேதங்களின் அடிப்படையில் உள்ள மதம் ஒன்றை நம்பாதவனும் ஓர் இந்துவாக இருக்க முடியும் என்பதற்கு பல சந்ததிகளாக நம்மிடையே சகோதரர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சமணர்களை உதாரணமாகக் காட்டலாம். அவர்களை இந்துக்கள் இல்லை என்று சொன்னால் தாம் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அவர்களின் மனம் மிகுந்த வேதனைக்கு உள்ளாகும். நம் கண் முன்னே இருக்கும் ஒரு வாழும் உதாரணத்தைக் காட்டலாம் என்பதற்காக இதைச் சொல்லிவிட்டு இப்போது அந்த சொற்களின் வேற்றுமையை நாம் ஆராயலாம். ஓர் உதாரணத்தைக் காட்டியதால் நாம் ஒருதலைப் பட்சமாக நமது வாதத்தின் முடிவை எட்டிவிட்டோம் என்று எவரும் நினைக்க வேண்டாம். நமது தேசிய மற்றும் கலாச்சார அளவில் இந்துத்துவத்தைப் பற்றி நாம் இதுவரை விளக்கியிருக்கிறோமே தவிர “இயம்” (-ism) என்று முடியும் எந்த சித்தாந்தத்தைப் பற்றியும் நாம் பேசவில்லை என்பதை வாசகர்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கக்கூடும்.

– veer savarkar

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்துத்துவத்தின் அடிப்படைகள்”

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com