ஐஐடி சம்பவம் : நடந்தது என்ன?

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசு 27-5-2017 அன்று ஒரு வரைவை வெளியிட்டது. இனி இறைச்சிக்காக சந்தையில் பசு, எருது, ஒட்டகங்கள் போன்றவற்றை விற்கக்கூடாது என்றும் சில விதிகளை சேர்த்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அந்த வரைவு வெளிவந்தது.

மூன்று நாள்களுக்கு முன் (28-5-15) சென்னை ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தியிருக்கின்றனர். அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஆர்.சூரஜ் என்பவர் முன்னின்று நடத்தினார்.  மிகப்பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும், இந்தியா முழுவதும் இந்த நிகழ்வு பேசப்படும் என்று இவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு போதிய விளம்பரமோ, வெளிச்சமோ விழவில்லை. விவாதம்கூட எழவில்லை. இது இவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று எதிர்பார்த்து ஏமாந்தனர்.

அதற்கு அடுத்தநாள் ஜெயின் மாணவர்கள் சாப்பிடும்போது (அங்கு சைவம் மட்டுமே சாப்பிட அனுமதி) அங்கே சென்ற சூரஜ் மாட்டுக்கறியை சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டியுள்ளான். அவனோடு கூட சென்ற இன்னும் இரண்டுபேரும் ஜெயின் சமூக மாணவர்களை மிரட்டியுள்ளனர். (ஜெயின் சமூதாயத்தவர்கள் அசைவ உணவை சாப்பிடமாட்டார்கள். இது தெரிந்தும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெயின் மாணவர்களிடம் தகராறு செய்தனர்) அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த மணிஷ்குமார் ஜெயின் என்ற மாணவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயினுக்கும் அடிபட்டது.

இந்த தகராறில் மணிஷ்குமாருக்குத்தான் பலத்த அடி. மூன்றுபேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். பல இடங்களில் இரத்த காயங்கள். மணிஷ்குமார் ஜெயினுடைய கை எலும்பை அடித்தே உடைத்திருக்கிறார்கள். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

கை எலும்பு  உடைக்கப்பட்ட நிலையில் மணிஷ்குமார்

இங்குதான் தமிழ்நாட்டின் சில மீடியாக்கள், அமைப்புகள் தங்கள் அயோக்கித்தனத்தை காட்டிவருகின்றன. மணிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையோ அல்லது அவர் தரப்பு வாதத்தையோ இதுவரை இந்த கள்ள மீடியாக்களும் கள்ள அமைப்புகளும் காட்டவில்லை. கள்ள மௌனம் சாதித்து வருகிறார்கள். அவரை சந்தித்து என்ன நடந்தது என்றுகூட கேட்கவில்லை.

சூரஜ் என்ற மாணவருக்கு மட்டுமே அடிபட்டிருக்கிறது என்கிற ரீதியில் மீடியாக்கள் செய்திகளை பரப்பிவருகின்றன. இதை தான் அவர்கள் எதிர்பார்த்தனர். சூரஜ் அடிபட்டு கொண்டு செல்லும்நிலையில்கூட அவருடன் இருந்தவர்கள் இதை எதிர்பார்த்ததுபோல சிரித்துகொண்டே இருந்தனர். மீடியாக்கள் வர வர எதிர்பார்த்த விஷயம் நடக்கப்போகிறது என்ற பூரிப்போடு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டனர்.

 

மீடியாக்கள் வந்தவுடன் அடித்தது பாஜக, ஆர்எஸ்எஸ், மாணவர் அமைப்பான அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் என்கிற ஏபிவிபி என்று கத்த ஆரம்பித்தனர். ஆனால் மணிஷ்குமார் எந்த அமைப்பிலும் இல்லை. எந்த கட்சியிலும் இல்லை. ஆனாலும் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி என்று பழிசுமத்தி வருகிறார்கள். மணிஷை ஏபிவிபி என்று குற்றம்சாட்டுபவர்கள் சூரஜ் கம்யூனிச நக்சலைட்வாதி என்று சொல்ல மறுப்பது ஏன்? இதை மூடிமறைக்க காரணம் என்ன?

அதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்னவென்றால் சூரஜ் தமிழ் மாணவனாம். பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்தவர்கள் பதிவிட்டு பரப்புவருகிறார்கள். இப்படி பதிவு செய்து தமிழர்கள் மத்தியிலும் தமிழ் மாணவர்கள் மத்தியிலும் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துவருகின்றனர். சூரஜ் மலையாளி என்று கேரள மாநில முதல்வரே அறிக்கை கொடுத்திருக்கிறார். ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களது ஒரே நோக்கம் இந்து அமைப்புகளின்மீது பழிபோட்டு கலவரத்தை தூண்டி ஆதாயம் பெறவேண்டும். அவ்வளவுதான்.

 

இவர்கள் மாட்டுக்கறி விழா வைத்து சாப்பிட்டபோது ஐஐடியில் படிக்கும் எந்த மாணவரும் இதை கேள்விகூட கேட்கவில்லை. அங்கு செயல்பட்டுவரும் எந்த மாணவர் அமைப்பும் எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லை. மாணவர்கள் நினைத்திருந்தால் அல்லது மணிஷ் போன்ற மாணவர்கள் அல்லது ஏபிவிபி மாணவர்கள் நினைத்திருந்தால் அப்போதே பிரச்சனை ஏற்பட்டிருக்கும். அல்லது கலவரம் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட எந்த சம்பவமும் மாட்டுக்கறி விழாவில் நடைபெறவில்லை. இது முழுக்க முழுக்க வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்பட்டு வம்பிழுத்திருக்கின்றனர் சூரஜ் மற்றும் சில மாணவர்கள்.

ஐஐடியில் கம்யூனிச, இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்தை சகமாணவர்கள் பார்த்துக்கொண்டுதான் வருகிறார்கள். ஒருநாள் எல்லோரும் இவர்களுக்கு எதிராக திரும்ப போகிறார்கள். அப்போது கம்யூனிச, இஸ்லாமிய ரௌடிகள் முழுவதுமான அங்கிருந்து துடைத்து எறியப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com